Thursday, August 20, 2009

கோலாக்கள் தூய்மையானவையா?.....நாடாளுமன்றத்திற்கு ஒரு விதி நாட்டுக்கு ஒரு விதி என்று இருக்கலாமா?

உலகெங்கும் பரவலாக விற்கப்படும் கோகா கோலா, பெப்சி கோலா சுவைநீர்களில் சேரும் பொருள்கள் சிலவற்றை ஆய்வோம்.
1. பாஸ்பாரிக் அமிலம் (Phosphoric Acid்) மூலம் சுவைநீரில் அழுத்தத்துடன் கலக்கப்பட்ட கரிவளி வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. பாஸ்பாரிக் அமிலத்தின் கொடையாகிய பாசுபேட் குருதியில் கூடுவதால் அதற்குச் சமமாக கால்சியம் சத்து (Calcium), எலும்புகளிலும், பற்களிலும் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த பாஸ்பாரிக் அமிலம் இறுதியாக சிறுநீரில் வெளியாகும்போது, கூடவே பயனுள்ள கால்சியமும் வெளியேற்றப்படுவதால் எலும்புகளும், பற்களும் வலு குறைகின்றன.
2. சுவைநீர்கள் செய்ய குழாய் நீரைப் பயன்படுத்தினால் குழாய்நீரில் உள்ள குளோரின், டிரை ஆலோ மீதேன்கள் (TRIHALOMETHANES), காரீயம் (Lead), காட்மியம் (Cadmium) மற்றும் பல வேதுப் பொருள் மாசுக்கள் கலந்துவிடும்.
ஒரு புட்டி கோலா சுவைநீரில் 10 தேக்கரண்டி சர்க்கரையும், 150 கிலோ கலோரி எரிசக்தியும், 30-55 மி.கி. காபீனும் சேர்ந்துள்ளன. அமெரிக்க சோளத்திலிருந்து (Maize) பழ இனிமத்தை (Fructose) பெற்றுக் கலக்குகிறார்கள். கோலாக்கள் சர்க்கரைப்பாகு போல் இனிக்க இவ்வாறு கூடுதலாகக் கலக்குகிறார்கள். இந்தச் சுவைநீரைச் சாப்பிட்டால் 1. நாவில் இனிப்புச் சுவை மிகும். 2. பசி அடங்கும். இதையே 3-4 புட்டிகள் என நாள்தோறும் குடிப்பவர்கள் தங்கள் அன்றாட உணவில் புரதம், கொழுப்பு, தாதுக்கள், நுண்ணூட்டச் சத்துகளான வைட்டமின்கள் சேர்ப்பது எங்ஙனம்?
உடல் இனிப்பு கூடக்கூட இன்சுலின் சுரப்புக் கூடுகிறது. அதிக இன்சுலின் சேர்வதால் 1. உயர் ரத்த அழுத்தம். 2. உயர் ரத்தக் கொழுப்பு (Cholesterol) 3. இதய நோய்கள். 4. நீரிழிவு. 5. உடற்பருமன் - வந்து சேரும்.
பல ஆண்டுகளுக்கு முன்பே சாக்கரின் (SACCHARIN) மற்றும் சைக்கிளாமேட் (CYCLAMATE) என்ற செயற்கை இனிப்புகள் புற்று ஈனிகள் (இஹழ்ஸ்ரீண்ய்ர்ஞ்ங்ய்ள்) எனத் தெரிந்து அதைத் தடை செய்தார்கள். கோலாக்காரர்களின் பணப்பசி தணிந்தது உண்டா? இல்லவே இல்லை. Diet SODA வேறுபட்ட குடிநீர் என்றும் நீரிழிவு, பருமன் உடையோர் குடிக்கலாம் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்தச் சுவைநீரில் தற்போது அஸ்பார்டேம் (ASPARTAME) சேர்க்கிறார்கள். இந்த அஸ்பார்டேம் என்ன செய்யும்?
மூளைப்புற்று, பிறவி ஊனம், நீரிழிவு, உணர்வுக் கோளாறுகள், கைகால் வலிப்பு என்ற நோய்களை உருவாக்க வல்லது இந்த அஸ்பார்டேம்! அஸ்பார்டேம் கலந்த சுவைநீரை வெகுநாள்களாகச் சேமித்து வைத்தாலோ, சூடான இடத்தில் வைத்தாலோ, அப்பொருள் மாறி மீதைல் ஆல்ககால் என்ற மெதனாலாக (Methanol) மாறும். இந்த மெதனால் பார்மால் டிஐடு ஆகவும், பார்மிக் அமிலமாகவும் மாற வல்லது. இவை இரண்டும் புற்றீனிகள் ஆகும்!
கலப்படமற்ற நல்ல குடிநீரின் - அமிலத்தன்மை ல்ஏ.7 அதாவது நடுநிலை காரமும் இல்லை. அமிலமும் இல்லை. கோலா சுவைநீரின் அமிலத்தன்மை ல்ஏ 2-4 வரை உள்ளது. இந்தக் கோலாவை மலக்கழிவுத் தொட்டியில் ஊற்றினால் கரப்பான் பூச்சிகளும், தெளிப்பான் மருந்தாக அடித்தால் பயிர் பூச்சிகளும் மடிவது இதனால்தான். உடைந்த பல் ஒன்றை ஒரு குவளை கோலாவில் போட்டு வையுங்கள். 7 நாள்களில் உடைந்த பல் கரைந்துவிடும். இந்த அமிலத்தையும் குடிக்கத்தான் வேண்டுமா? சித்தர் பாடல் மாறத்தான் வேண்டுமா? ""கல்லைத்தான், மண்ணைத்தான், கோலாவைத்தான் குடிக்கத்தான், கற்பித்தானா"? இல்லவே இல்லை.
அதிகமான இனிப்பு - பற்களுக்குக் கேடு, சிதைவுநோய்கள் பெருகும். கோலாவில் கலக்கப்படும் நிறமிகள் செயற்கையானவை. மேற்கோளாக மஞ்சள் எண்.5 (Yellow No.5) சேர்க்கிறார்கள். இதன் மூலம் இளைப்பு நோய் (Asthma), தோல் தடிப்பு (hives) மற்றும் ஒவ்வாமை நோய்கள் உருவாகலாம்.
இந்தக் கோலாக்களில் கோலகலமான விற்பனைக்கு உதவுவது என்ன தெரியுமா? விளம்பரங்கள்! பத்திரிகை விளம்பரமாக ஆண்டொன்றுக்கு 70 கோடி அமெரிக்கா டாலர்கள் செலவு. நேரடி விற்பனை, ஊக்கப்பரிசு, விளையாட்டுப் போட்டிகள், கடைக்காரர்களின் முகமை வீதம், விளம்பரப் பலகைகள் என இதைவிடி அதிகச் செலவுகள் செய்கிறார்கள்.
இந்தியாவுக்கு 1977-இல் வந்தார்கள். அப்போதைய அரசு விரட்டியது. மீண்டும் வந்தார்கள். கோக கோலாவிற்காக மட்டுமே இந்தியாவில் 52 தொழிற்சாலைகள் உள்ளன. அவை உறிஞ்சும் நமது தாயகத்தின் நிலத்தடி நீரோ நாளொன்றுக்கு எட்டு முதல் 15 லட்சம் லிட்டர் வரை நிலத்தடி நீர் போனால் அடுத்த வறட்சிக் காலத்தில் நமக்கு எந்நீர் கிடைக்கும்?
இந்தியாவில் செய்யப்படும் கோலாக்கள் தூய்மையானவையா? இல்லை என்பதுதான் மெய்நிலை! நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை மெய்ப்பித்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் கோலா விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது! இதை ஏன் நாடு முழுமையாக விரிவுபடுத்தவில்லை? நாடாளுமன்றத்திற்கு ஒரு விதி நாட்டுக்கு ஒரு விதி என்று இருக்கலாமா?
தில்லியில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment்) செய்த ஆய்வுகளின் முடிவுகள், விரிவாக அவர்களின் பத்திரிகையான ஈர்ஜ்ய் ற்ர் உஹழ்ற்ட் - 2006 ஆகஸ்டு 15ஆம் நாள் இதழில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட 57 புட்டி கோலாக்கள் அனைத்திலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!
நச்சுநீர் வேண்டாம் நமக்கு
நம்முடைய பாரம்பரிய இளநீர், மோர், சுவைப்பால், சாறுகள், பதநீர் போன்றவை தாராளமாகக் கிடைக்கும்போது இந்தக் கோலா உபத்திரவத்தை விலைக்கு வாங்குவானேன்? மக்கள் விழிப்படையட்டும். நம் நாட்டு மக்கள் இந்தச் சுவைநீர்கள் வேண்டாம் என முடிவெடுக்கட்டும். விரட்டுவோம் நஞ்சினை! புகட்டுவோம் நல்லதொரு பாடம்!


--
Thanks and Regards

Ashok.....

No comments:

Post a Comment